கொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/- - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, May 31, 2021

கொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-

 கொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990 : பவுடர் வடிவில் விரைவில் விற்பனை!

 

அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் மருத்துவப் பரிசோதனைகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த இம்மருந்து உதவுவது மற்றும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை வெகுவாக குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற தடுப்பு மருந்துகள் ஊசிகள் மூலமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது 2-டிஜி தூள் வடிவில் சாச்செட் எனப்படும் சிறிய பாக்கெட்டில் பவுடராக கொடுக்கப்படும்.

இந்த மருந்தை தண்ணீரில் கரைப்பதன் மூலம் வாய்வழியாக எடுத்துக்கொள்ள முடியும். இது வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட குவிப்பு இந்த மருந்தை தனித்துவமாக்குகிறது, எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் இந்த மருந்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால் விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது. அநேகமாக ஜூன் மாதம் நடுப்பகுதியில் இந்த மருந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.


இதையடுத்து, தற்போது மருந்தின் விலையை டாக்டர் ரெட்டி ஆய்வகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
 

2-டிஜி தூளின் ஒரு சாச்செட் ரூ.990-க்கு விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விலை தனியாருக்கு தான் என்றும், மத்திய, மாநில அரசுகள் மட்டும் அரசு மருத்துவமனைகளுக்கு தள்ளுபடி விலையில் இந்த மருந்து விற்கப்படும் என்று டாக்டர் ரெட்டி ஆய்வகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

இதற்கிடையே, வியாழக்கிழமை முதல் இம்மருந்தின் 10,000 பாக்கெட்டுகள் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த வாரம், டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் ஒரு டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், 2 டிஜி என்பது ஒரு வாய்வழி எடுத்துக்கொள்ளும் வைரஸ் சிகிச்சை மருந்து ஆகும். இது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மிதமான முதல் கடுமையான கோவிட் -19 நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் மட்டுமே நிர்வகிக்கப்படலாம்.

ஆனால், சந்தையில் எங்கள் மருந்தின் போலி தயாரிப்புகள் வெளியாகி வருகிறது. 2 டிஜி என்ற பெயரில் போலியான அல்லது சட்டவிரோத தயாரிப்புகளை விற்கும் முகவர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் 2 டிஜி தொடர்பாக வரும் செய்திகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜூன் மாதம் மத்தியில் தான் இம்மருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியாக விற்பனை தொடங்கும், என டாக்டர் ரெட்டீஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

----------------------------நன்றி-----------------------------

 2DG Medicine Price in India,2DG Medicine,2DG Medicine for Covid,2DG Drug,2DG Powder,2DG Medicine Price,2DG Glucose,2DG Medicine Buy,2DG Medicine Buy Online,Covid Medicine,Clevira,Clevira Buy,Clevira Buy OnlineNo comments:

Post a Comment