ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசர் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, March 2, 2011

ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசர்


மொஸில்லா நிறுவனம், ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக் கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது. இதன் சோதனை தொகுப்பு ஒன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதில் கிடைக்க இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் புக்மார்க், சேவ் செய்யப்பட்ட பாஸ்வேர்ட், ஓப்பன் டேப் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டரி ஆகிய வற்றை அப்படியே ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கு மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வசதி தரப்படுகிறது.

இந்த மொபைல் பிரவுசருக்கென ஏறத்தாழ 150 ஆட் ஆன் தொகுப்புகள் தரப்படுகின்றன. இவை பிரவுசருக்குக் கூடுதல் திறன் அளித்து, அதன் செயல்பாட்டினைப் பயனாளர்களின் விருப்பத் திற்கேற்ற படி அமைத் திடும். இந்த வகையில் பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்புகளை வெளியிட்ட பின்னரே, மற்ற பிரவுசர்கள் அவற்றைப் பின்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமின்றி, நோக்கியா நிறுவனத்தின் மேமோ ( Maemo ) ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் என்900 வரிசையில் உள்ள மொபைல் போன்களிலும் இயங்கும். ஆனால் ஐ-போன்களில் இது இயங்காது. ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் தன் போன்களில் இயங்கும் பிரவுசர்கள், தன்னுடைய வெப்கிட் இஞ்சினைப் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது.

பயர்பாக்ஸ் மொபைல் பிரவுசர், சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களிலும் இயங்காது. அந்த வகையில் விண்டோஸ் மொபைல் மற்றும் பிளாக்பெரி சிஸ்டங்களில் இயங்காது. இதற்கும் ஒன்றை ஒன்று ஒத்துப் போகாத தொழில் நுட்பங்களே காரணம் ஆகும்.


மேலும் இதை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த கானொளியில் காண்க!!!



------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment