பட்டதாரிகளுக்கு வங்கிகளில் 13 ஆயிரம் காலியிடங்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, August 4, 2017

பட்டதாரிகளுக்கு வங்கிகளில் 13 ஆயிரம் காலியிடங்கள்


ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக, வங்கித்துறை மாறியுள்ளது. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்கம், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, புதிய கிளைகள், புதிய பரிமாணத்தில் செயல்படுகிறது. வங்கி பணிக்கு செல்வது தற்போது எளிதான ஒன்றாகி விட்டது. 21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்று உள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2017 - 18ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: இந்தியாவில் உள்ள 56 கிராம வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 7,836 கிளரிக்கல் மற்றும் 5,123 மேலாளர் பணியிடங்கள் இதில் அடங்கும். தமிழகத்தில் பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கி என இரண்டு வங்கிகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 570 இடங்கள் உள்ளன.

யார் விண்ணப்பிக்கலாம்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி/கல்லுாரிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 600 ரூபாய் (எஸ்சி/எஸ்டி 100 ரூபாய்). இதனை ஆன்லைன் / வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். ஜூலை 24 முதல் ஆக., 14 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். உதவியாளர் பதவிக்கு ஆன்லைன் முறையிலான பிரிலிமினரி மற்றும் மெயின் என இரண்டு கட்ட தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதி்ப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரி பதவிக்கு எழுத்துத்தேர்வு செப்., 9, 10 மற்றும் 16ம் தேதி நடைபெறும். உதவியாளர்
பதவிக்கு எழுத்துத்தேர்வு செப்., 17, 23, 24ம் தேதிகளில் நடைபெறும்.

கடைசிநாள்:
2017 ஆக.14

விபரங்களுக்கு : http://www.ibps.in/

--------------------------------------நன்றி----------------------------------------

No comments:

Post a Comment