பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, July 9, 2013

பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்மொஸில்லா நிறுவனம், தான் அறிவித்தபடி, மொபைல் போன்களுக்கான தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து எங்கெல்லாம் இயலுமோ, அந்த நாடுகளில் எல்லாம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்ட மொபைல் போன்களை வெளியிட, மொஸில்லா முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்மார்ட் போன்களுக்கானது. திறவூற்று அடிப்படையில் யார் வேண்டுமானாலும், இதன் குறியீட்டு வரிகளைப் பெற்றுக் கொள்ளலாம். புதிய முயற்சி என்ற அடிப்படை வேகத்துடன் இது வடிவமைக்கப்பட்டு உலகிற்கு வழங்கப்படுகிறது. இணையம் என்பது உலகின் பொதுவான ஓர் இடம். இதனை அனைவரும், உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் அணுக இயலும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளதாக மொஸில்லா அறிவித்துள்ளது.------------------- நன்றி -------------------


இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment