புத்தம் புதிய Samsung "Galaxy R" - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, January 10, 2012

புத்தம் புதிய Samsung "Galaxy R"



 
சாம்சங் நிறுவனம் தன் கேலக்ஸி எஸ் 2 மொபைலுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து, சில மாற்றங்களை அதில் ஏற்படுத்தி, வசதிகளைச் சுருக்கி, கேலக்ஸி ஆர் என்ற பெயருடன் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இணைய தளம் மூலம் வாங்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 20,999. தொடக்கத்தில் இதன் வெளிச் சந்தை விலை ரூ.26,990 ஆக இருந்தது. 

இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள்:
 
4.19 அங்குல எல்.சி.டி. கெபாசிடிவ் தொடுதிரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, Wi-Fi, Wi-Fi Hotspot தொழில் நுட்பம், ஏ-ஜிபிஎஸ் இணைந்த ஜி.பி.எஸ். சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 3.0, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ பதிவு, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, முன்பக்க கேமரா, 8 ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தக் கூடிய ராம் நினைவகம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இந்த போனில் உள்ள நவீன வசதிகளாகும். ஸ்டோரேஜ் 8 ஜிபி, ராம் மெமரி 1 ஜிபி, ரீட் ஒன்லி மெமரி 2 ஜிபி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஆர்கனைசர், இமேஜ், டாகுமெண்ட் எடிட்டர்கள் கிடைக்கின்றன. கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யு-ட்யூப், காலண்டர் மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றிற்கு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. 1650 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 9 மணி நேரம் பேசுவதற்கு மின்சக்தியைத் தருகிறது. வாய்ஸ் மெமோ, டயல் கட்டளைகளைத் தரலாம். இதன் பரிமாணம் 125 x 66 x 9.5 மிமீ. எடை 135 கிராம். நான்கு அலைவரிசைகளில் செயல்படுகிறது. இந்த போனின் எடை வழக்கத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக 135கிராம் உள்ளது. 



இந்த கானொளியில்  Samsung Galaxy R பற்றிய முழு விவரங்களும் உள்ளது .









------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment