புத்தம் புதிய "புரஜக்டர் போன்" - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, January 6, 2012

புத்தம் புதிய "புரஜக்டர் போன்"


மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் எம்.டி.பி 9 (MTP9) என்ற பெயரில் டச் ஸ்கிரீன் புரஜக்டர் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதனுள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் புரஜக்டர் பொழுது போக்குவதற்கு நல்ல வகையில் உதவுகிறது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 208 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் கொண்டுள்ளது. இதன் திரையில் நான்கு வகையான செட்டிங்ஸ் அமைக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம் களை எளிதாக இயக்கலாம். புளுடூத், யு.எஸ்.பி., 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 4 ஜிபி மெமரி ஆகிய வசதிகள் உள்ளன. மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை உயர்த்தலாம்.

அதிகமான அளவில் ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் பதியப்பட்டு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. MP3/WAV/AAC/AMR/MIDI ஆகிய ஆடியோ பார்மட்களை இதன் மியூசிக் பிளேயர் இயக்குகிறது. நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு பதிவு செய்யக் கூடிய, வயர் இணைப்பு இல்லாமல் இயங்கும் எப்.எம். ரேடியோ இணைக்கப் பட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள King Movie பிளேயர் வீடீயோ பைல்களைச் சுருக்கி, மூலக் கோப்பின் தன்மை மாறாமல் காட்டுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,999. இந்தியா முழுவதும் உள்ள பெரிய விற்பனை நிலையங்களில் இந்த போன் விற்பனைக்கு உள்ளதாக மேக்ஸ் மொபைல்ஸ் அறிவித்துள்ளது.
------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

4 comments:

 1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 4. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete