Gmail வழங்கும் "இரட்டை அடுக்கு பாதுகாப்பு" - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, November 29, 2011

Gmail வழங்கும் "இரட்டை அடுக்கு பாதுகாப்பு"

 

தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை அளித்து வரும் கூகுள் நிறுவனம், தன் ஜிமெயில் பிரிவில் தற்போது இரட்டை அடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது. கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் மூலம் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தெரிந்து கொண்டு, நமக்குத் தொல்லை தரும் நபர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அநேகமாக இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் மின் அஞ்சல் வசதியைப் பயன் படுத்துவதால், ஜிமெயில் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைத் திருடுவது சிலரின் நோக்கமாக இருந்து வருகிறது. இதனை உணர்ந்த கூகுள் நிறுவனம், இப்போது தன் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது.

முதல் கட்ட பாதுகாப்பு வழக்கமான பாஸ்வேர்ட். அடுத்த கட்ட பாதுகாப்பாக, கூகுள் நிறுவனம் எஸ்.எம்.எஸ். மூலம் நமக்கு அளிக்கும் கோட் எண். வழக்கமான கம்ப்யூட்டர் அல்லாமல், வேறு ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துகையில், இந்த குறியீடு எண் தரப்பட வேண்டும். இந்த குறியீடு எண் உங்கள் மொபைலுக்கு மட்டுமே அனுப்பப் படுவதால், மற்றவர்களால் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பயன் படுத்த முடியாது. இதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கான குறியீட்டு எண்ணை எந்த மொபைல் போனில் பெற விரும்புகிறீர்கள் என்பதனை ஜிமெயில் தளத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு டெக்ஸ்ட் எஸ்.எம்.எஸ். அல்லது வாய்ஸ் மெயில் சேவையினை வழங்கும் போன் மற்றும் சேவை நிறுவன மொபைல் அக்கவுண்ட் கொண்டிருக்க வேண்டும். வழக்கம் போல ஜிமெயில் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டினைத் திறக்கவும். அடுத்து 2ண்tஞுணீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண ண்ஞுttடிணஞ்ண் ணீச்ஞ்ஞு என்ற பக்கம் செல்லவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், நம் நாட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன்பின் எந்த மொபைல் சேவை எண்ணில், குறியீட்டு எண்ணைப் பெற விரும்புகிறோமோ, அந்த எண்ணை டைப் செய்திட வேண்டும். அடுத்து குஞுணஞீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண ஞிணிஞீஞு என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் பிரிவிலிருந்து உங்களுக்கு ஒரு கோட் எண், ஆறு இலக்கங்களில், எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப்படும். இதனை கோட் எண் என்ற பாக்ஸில் டைப் செய்து ஙஞுணூடிஞூதூ என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர், அடுத்த 30 நாட்களுக்கு, இந்த கோட் எண்ணை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி கேட்கப் படும். இது ஒரு பாக்ஸாகக் காட்டப்படும். நீங்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான கம்ப்யூட்டரில் இந்த செட்டிங்ஸை மேற்கொண்டால், இதனைக் கிளிக் செய்திட வேண்டாம். அடுத்து கூதணூண ணிண 2ண்tஞுணீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண என்பதில் கிளிக் செய்திடவும். உடன் அக்கவுண்ட்ஸ் செட்டிங்ஸ் பக்கம் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

இந்த வசதி உங்களுக்குச் சற்றுக் குழப்பமாக இருப்பதாக உணர்ந்தால், எந்த நேரத்திலும் இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதியை ரத்து செய்திடலாம். எணிணிஞ்டூஞு அஞிஞிணிதணt ண்ஞுttடிணஞ்ண் கம் செல்லவும். இங்கு யூசர் நேம், பாஸ்வேர்ட், குறியீட்டு எண் ஆகியவற்றைத் தரவும். பின்னர் கூதணூண ணிஞூஞூ 2ண்tஞுணீ திஞுணூடிஞூடிஞிச்tடிணிண என்பதில் கிளிக் செய்திடவும். ஒரு பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, உறுதியாக ரத்து செய்திடவா என்று கேட்கும். ஓகே கொடுத்து வெளியேறவும்.

இந்தப் பாதுகாப்பு இருப்பதனால், வழக்கமான கம்ப்யூட்டர் இல்லாமல், மற்ற கம்ப்யூட்டர் மூலமாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டினைக் கையாள்கையில், குறியீட்டு எண் கேட்கப்படும். இதனை உங்கள் மொபைல் போனுக்கு மட்டுமே அனுப்பப்படுவதால், மற்றவர்கள் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைய முடியாது. உங்களுக்குச் சிரமம் குறைக்க, எந்த கம்ப்யூட்டரிலும் குறியீட்டு எண்ணை 30 நாட்களுக்குப் பதிந்து வைக்கலாம்.

நீங்கள் பதிந்து வைத்துள்ள மொபைல் போன் காணாமல் போய்விட்டால், இது குறித்து மெயில் அனுப்பி, கூகுள் நிறுவனத்திடம் தீர்வைப் பெறலாம்.

ஸ்மார்ட் போன் அல்லது வேறு வகை சாதனங்கள் மூலம் ஜிமெயில் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அந்த சாதனங்களுக்கான குறியீட்டு எண்ணைத் தனியாகப் பெறலாம். அப்போது அந்த சாதனத்திற்கென குறியீட்டு எண் தரப்படும். இதனையும் 30 நாட்களுக்குப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

முதலில் நாம் தயங்கத்தான் செய்வோம். எங்கே ஜிமெயில் இயங்காமலே போய் விடுமோ எனப் பயப்படலாம். ஆனால், பயன்படுத்திய பின்னர், இதுவும் எளிது தான் என்பதனை நீங்கள் உணர்வீர்கள். அனைத்து வேலைகளுக்கும் நாம் ஜிமெயில் பயன்படுத்துகிறோம். அதில் பல ரகசிய ஆவணங்களைப் பதிந்து வைக்கிறோம். எனவே கூடுதல் பாதுகாப்பு நமக்கு நல்லதுதானே.



------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment