ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, March 15, 2011

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு


உங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப்படுத்த உங்களுக்கு விருப்பமா? எதற்கு இந்த கேள்வி? யார் தான் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம். ஆங்கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரிந்ததைச் சோதித்து அறிந்து கொள்ளவும், அருமையான ஓர் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் முகவரி http://vocabgenii.com இந்த தளத்தில் நுழைந்து முதலில் உங்களைப் பதிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்துப் பின்னர் பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்த பின்னர், இதில் விளையாடத் தொடங்கலாம்.

விளையாடுவதற்கு முன்னர், உங்கள் லெவல் என்னவென இந்த தளத்திற்குக் கொடுக்க வேண்டும். பின்னர் விளையாடத் தொடங்கலாம். இதில் பல சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றிலும் ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் மாற்றிக் கொடுக்கப்படும். குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளும் விளக்கமும் தரப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு, சொல்லைக் கண்டுபிடித்து, முதல் எழுத்திலிருந்து வரிசையாகக் கிளிக் செய்திட வேண்டும். சொல் முழுவதும் கிளிக் செய்துவிட்டால், சரி/தவறு எனச் சுட்டிக் காட்டப்பட்டுப் பின் அடுத்த சொல் காட்டப்படும். இப்படியே முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனச் சென்று, இறுதியில் நீங்கள் பெற்ற மதிப்பெண் காட்டப்படும்.இதனால், நாம் ஒரு அகராதியைப் புரட்டிப் பார்த்த அனுபவத்தினைப் பெறுகிறோம். பல புதிய சொற்களை அறியும் வாய்ப்புகளையும் பெறு கிறோம். நம் ஆங்கிலச் சொல்வளம் பெருகிறது.

------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment