நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, January 19, 2011

நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்



விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை.

இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.நோட்பேடில் நேரம்: பலர் தற்காலிகமாக, ஆனால் தொடர்ந்து குறிப்புகள் எழுத, நோட்பேடினைப் பயன்படுத்துகிறோம். சில தகவல்களை என்று எப்போது அமைத்தோம் என்று அறிய, அந்த நாள் மற்றும் நேரத்தினை அமைப்போம். இதனை நோட்பேட் தானாகவே அமைக்கும் வழி ஒன்று உண்டு. பைல் ஒன்றினைத் திறந்து முதல் வரியில்.LOG ( எல்லாமே பெரிய எழுத்துக்களில்) என்று அமைக்கவும். பின் வழக்கம்போல் குறிப்புகள் எழுதி வைக்கவும். நோட்பேட் நீங்கள் குறிப்பு அமைத்திடும் நேரம் மற்றும் தேதியை எழுதி வைக்கும். பின்னர், மீண்டும் இன்னொரு நாள் அல்லது இன்னொரு நேரம் பைலைத் திறந்தால், அந்த நேரம் மற்றும் நாள் அதில் அமைக்கப்படும். இப்படியே இது தொடரும். ஒவ்வொரு முறை பைலைத் திறந்து மூடுகையில் அதனை சேவ் செய்து மூட வேண்டும்.

2. புதிய கால்குலேட்டர்: மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் கால்குலேட்டரில் பல புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. நான்கு வகையான செட்டிங்ஸ் அமைப்பில் தரப்படுகிறது. ஸ்டாண்டர்ட், சயின்டிபிக், புரோகிராமர் மற்றும் ஸ்டேடிடிக்ஸ் ( Standard, Scientific, Programmer மற்றும் Statistics ) என பல பிரிவுகளில் இதனை நாம் இயக்கலாம். இவற்றில் நாம் விரும்பியதை செட் செய்து பயன்படுத்தலாம்.

3. புதிய அம்சங்களுடன் பெயிண்ட்: விண்டோஸ் 7 தொகுப்பில் இப்போது பல புதிய பிரஷ்கள் இணைக்கப் பட்டுள்ளன. இதனால் நாம் இதுவரை ஏற்படுத்திய சில வழக்கமான கோடுகளுடன் இன்னும் பல வகையான கோடுகளை ஏற்படுத்தலாம். கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பிரஷ் எனத் தரப்பட்டிருக்கும் இந்த பிரஷ்கள் புதிய பல உருவங்களை உருவாக்கப் பயன்படுகின்றன.

பெயிண்ட் தளத்தில் உள்ள படம் ஒன்றை, ஒவ்வொரு பிக்ஸெல்லாக எடிட் செய்வதற்கு வசதி தற்போது தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் + ஜி அழுத்தி கிரிட்டைக் கொண்டு வர வேண்டும். பின் படத்தினை 600 டிகிரி அளவில் ஸூம் செய்து, காட்சி அளிக்கும் பிக்ஸெல்களில் தேவைப்படும் பிக்ஸெல்களை ஒவ்வொன்றாக எடிட் செய்திடலாம்.



------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment