மைக்ரோசாப்ட் எச்சரிக்கை - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, January 20, 2011

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை





இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8 பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டர்களின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது.

இவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசை காட்டி, ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள இணைய தளத்திற்கான தொடர்பில் கிளிக் செய்திடத் தூண்டுகின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது இவர்களுக்கு எளிதாகிறது. பிரவுசர்கள் கம்ப்யூட்டர் தரும் மெமரியினைத் தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின் புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது. பின்னர் அவற்றின் மூலம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.


அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் ( Steve Lipner ) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ். இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும்.

பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக:- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும். இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும். மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.



------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

1 comment: