அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, December 25, 2010

அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த


அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த



ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.  மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ ( உண்டோ )  பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில்  5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30  நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.



வேர்டில் பிக்சர் ப்ளேஸ் ஹோல்டர் ( Picture Placeholder )


வேர்ட் தொகுப்பில் ஆவணங்கள் உருவாக்கப்படுகையில், அதில் நிறைய படங்கள் இணைப்பதாக இருந்தால், அதனால் ஆவணங்களைத் திருத்துவதில் தாமதம் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் படங்களை வைத்துக் கொள்ள நினைவகத்தின் இடம் அதிகம் எடுக்கப்படுகிறது. ஆவணக் கோப்பினைத் திறக்கும்போதே இது தெரிய வரும். டெக்ஸ்ட் கிடைப்பதற்கும், படங்கள் கிடைப்பதற்குமான நேரத்தைக் கவனித்தால் இதனை நாம் உணரலாம்.  ஆவணங்களை விரைவாகத் திருத்துவதற்கென நாம் படங்களை நீக்கி வைக்கவும் முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்க வேர்ட் தொகுப்பில் ஒரு வழி உள்ளது. படங்கள் அதிகம் பயன்படுத்தி, வேர்டில் ஆவணங்களைத் தயாரிக்கையில் நாம் இந்த தீர்வைப் பயன்படுத்தலாம். இதற்கு வேர்ட் பிக்சர் பிளேஸ் ஹோல்டர் ( Picture ப்லாசெஹோல்தேர் )  என்று பெயர்.

இதனை இயக்கிவிட்டால் ஆவணத்தைத் திருத்துகையில்  படங்கள்  இருக்கும் இடத்தில் ஒரு கட்டம் மட்டுமே தெரியும். பிரிண்ட் பிரிவியூ பார்க்கையில் இந்த படங்கள் காட்டப்படும். டாகுமெண்ட்டைப் பிரிண்ட் செய்கையிலும் இந்த படங்கள் காட்டப்படும். ஆனால் டாகுமெண்ட்டை திருத்துகையில் கட்டம் மட்டுமே காட்டப்படும். இந்த வசதியை எப்படி கொண்டுவருவது என்று பார்ப்போம்.  Tools  மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில்  View   டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Picture Placeholders என்னும் இடத்தைக் கண்டுபிடித்து எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் உருவாக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்களை எடிட் செய்கையில் படங்கள் கொண்டுவரப்படுவது இருக்காது. இதனால் நேரம் மிச்சமாகும், வேகமாக ஸ்குரோல் செய்து எடிட் செய்திடலாம்.


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment