கம்ப்யூட்டர் இயங்கக் காத்திருக்க வேண்டாம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

கம்ப்யூட்டர் இயங்கக் காத்திருக்க வேண்டாம்



கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், அதன் பயாஸ் செட் அப் இயங்கி, நான் தயார் என்று, அதன் வேலைக்குத் தயாராகச் சில விநாடிகள் அல்ல, நிமிடங்களே ஆகின்றன. விரைவாக ஒன்றை முடிக்க வேண்டும் என விருப்பப்படுபவர்களுக்கு, இந்த இயங்கத் தயாராகும் நேரம், ஒரு பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு அளிக்கும் வகையில், ஒரு புதிய தொழில் நுட்பம் தயாராகிவிட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக, 1979லிருந்து இன்று வரை , பயாஸ் (BIOS-Basic Input Output System) இயக்க முறையில் தான் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகிறது. தற்போது வந்துள்ள யு.எஸ்.பி. ட்ரைவ் மற்று நவீன கீ போர்டுகளுக்கு இந்த முறை ஈடு கொடுத்து வேகமாக இயங்க முடியவில்லை. இதனாலேயே கம்ப்யூட்டர் பூட் ஆக நேரம் எடுக்கிறது.

இதற்கு மாற்றாக, அடுத்த தலைமுறை பெற இருப்பது UEFI - Unified Extensible Firmware Interface என்னும் தொழில் நுட்பமாகும். இதன் மூலம் ஓரிரு விநாடிகளில் ஒரு கம்ப்யூட்டரை இயக்கவும் நிறுத்தவும் முடியும். நவீன சாதனங்களான ப்ளாஷ் ட்ரைவ், தொடுதிரை, அசைத்தலில் இயக்கம், முகம் மற்றும் ரேகை உணர்ந்து இயக்கம் ஆகிய அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் இந்த தொழில் நுட்பம் இயங்கும் என்று தெரிகிறது.

ஒரு கம்ப்யூட்டரில் இயங்கும் முதல் தொழில் நுட்ப குறியீடு ( BIOS ) பயாஸ்.இது விண்டோஸ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் இரண்டிலும் உள்ளது. இதனை Firmware என்று அழைக்கின்றனர். ஏன்ன்றால், இது கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாகப்பட்டு, பதிந்து தரப்படுகிறது. தொடக்கத்தில் இயங்கும் இந்த குறியீடு, கம்ப்யூட்டரைத் தயார் செய்கிறது. ஹார்ட் டிஸ்க் ட்ரைவ், டிவிடி/சிடி ட்ரைவ், நெட்வொர்க்கிங் சாதனங்கள், யு.எஸ்.பி. போர்ட், வீடியோ கார்ட், கீ போர்டு மற்றும் மவுஸ் போன்ற கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட சாதனங்கள் அனைத்தையும், அந்த பைலில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக இருக்கின்றனவா என்று சோதனை செய்து, தவறு இருப்பின் அறிவிக்கிறது. எடுத்துக் காட்டாக, கீ போர்டு சரியாக இணைக்கப்படவில்லை என்றால் அல்லது மவுஸ் இணைக்கப்படவில்லை என்றால், உடனே அதனைத் தெரிவித்து, அவை சரி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. இதனால் தான், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்க ( Boot Time ) சற்று நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த பயாஸ் தொழில் நுட்பத்தினை வழங்குபவர்கள், பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தினர். இப்போது இதற்கு மாற்றாக, கம்ப்யூட்டர் விரைவாகத் தன் பணியினைத் தொடங்க UEFI தொழில் நுட்பத்தினைக் கொண்டு வந்துள்ளனர். இந்நிறுவனத்தின் வளர்ச்சித் துறை துணைத் தலைவர் இது குறித்து கூறிய தகவல்கள்.

UEFI தொழில்நுட்பமானது பல்வேறு சாதனங்களுக்கான தீர்வுகளைத் தர கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் கம்ப்யூட்டரின் தொடங்கும் நேரம் குறைப்பதுவும் ஒன்று. 1981ல் ஐ.பி.எம். வடிவமைத்த பெர்சனல் கம்ப்யூட்டருக்கென, பயாஸ் தரப்பட்டது. தற்போதைய கம்ப்யூட்டர்கள், பல நிலைகளில் முன்னேறிவிட்டன. எனவே அதற்கேற்ற தொழில் நுட்பமே நமக்கு தேவை. UEFI மூலம் ஒரு கம்ப்யூட்டரை, சொடக்குப் போடும் நேரத்தில், அதாவது 75 மில்லி செகண்ட்களில் இயக்கிவிடலாம். மேலும் இந்த தொழில் நுட்பம், புதிய துணை சாதனங்கள் உருவாக்கப்படுகையில், அதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றங்களுக்குக் காத்திராமல், அவற்றை இயக்க வழி தரும். தற்போதைக்கு இன்டெல் சிப்களுடன் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியதில், கம்ப்யூட்டர்கள் 5 முதல் 9 விநாடிகளில் பூட் ஆகி செயல்படத் தொடங்கின.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?


3 comments:

  1. பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete
  2. Nanbarae! when i like to view your page . Lot of advertisement opening and struggle to watch it. kindly try to avoid that. It just a compliments . Because i like to see your blog by this i inspired more .

    ReplyDelete
  3. 100% Real Money Making System.

    Vist Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com/2010/12/read-articles-to-earn-money.html

    ReplyDelete