இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று வெகுநாட்களாகவே நாம் சொல்லி வருகிறோம். இன்டர்நெட் பயன்பாட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், விரைவில் இது முதல் இடத்திற்கு வரும் என்றும் எழுதி வருகிறோம்.
ஆனால் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, இந்தியக் கிராமவாசிகளில் 84% பேர், இன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாமலேயே இருக்கிறார்கள். மீதம் இருக்கின்ற 16% பேர்களில் 85% பேர் இமெயில் பார்ப்பதற்கும், 67% பேர் வீடியோ பார்ப்பதற்கும், 48% பேர் கல்வி சார்ந்த தகவல்களைத் தேடுவதற்கும் இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம், கிராம மக்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில், 13% பேர் நவீன வேளாண் முறைகள் குறித்து கண்டறியவும், 8% பேர் உரவகைகள் குறித்து அறியவும் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர்.
இதே போல, கிராம மக்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும், இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும், 2009 ஆம் ஆண்டு, இணையத்தினைப் பயன்படுத்தியவர்கள் 26.7% உயர்ந்து இருந்தனர். 33 லட்சம் பேராக இருந்தவர்கள், 42 லட்சமாக உயர்ந்தனர். தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில், இன்டர்நெட் பயன் படுத்தும் 15 ஆயிரம் பேர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment