அறிமுகம் : 100 ஜிபி புளு ரே டிஸ்க் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, August 4, 2010

அறிமுகம் : 100 ஜிபி புளு ரே டிஸ்க்


பிளாப்பி டிஸ்க் எல்லாம் காணாமல் போன பொருளாகி, சிடி, மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மட்டுமே பைல்களைக் கொண்டு செல்லும் பொருட்களாகிவிட்டன. இவற்றில் சிடிக்களில் அதன் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் புளு ரே டிஸ்க்குகள் அதிக அளவில் டேட்டாக்களைக் கொள்ளும் சிடியாக அறிமுகமாகி, மக்களிடையே இடம் பெறத் தொடங்கி உள்ளன.

தற்போது அதிக பட்சமாக, ஒரு புளு ரே டிஸ்க்கில், ஒரு லேயருக்கு 25ஜிபி டேட்டா பதியப்பட்டு, இரண்டு லேயர் புளு ரே சிடியில் 50 ஜிபி டேட்டா கொள்ளளவு இருக்கும்படி கிடைக்கின்றன. இவற்றை இயக்கவும் தனி வகை புளு ரே சிடி ட்ரைவ்கள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன்.

அண்மையில் ஜப்பானில் இதில் ஒரு பெரிய அளவிலான மேம்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஷார்ப் மற்றும் டி.டி.கே நிறுவனங்கள், 100 ஜிபி கொள்ளளவுடன் புளு ரே டிஸ்க்குகளைத் தயாரித்து வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளன. ஜூலை முடிவில் ஷார்ப் நிறுவனமும், செப்டம்பர் மாதத்தில் டி.டி.கே. நிறுவனமும் இவற்றைக் கொண்டு வருகின்றன.

இந்த புளுரே சிடி பி.டி.எக்ஸ்.எல் (BDXL) வரையறை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லேயரில் 33.4 ஜிபி டேட்டா அமைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு சிடியில் நான்கு லேயர்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 100 ஜிபி டேட்டாவினைப் பதிய முடிகிறது. பி.டி.எக்ஸ்.எல். சிடி ப்ளேயர்களில், பழைய சிடிக்களையும் இயக்க முடியும். ஆனால் பழைய சிடி பிளேயர்களில், இந்த சிடியினை இயக்க முடியாது.

இந்த வகை 100 ஜிபி புளு ரே சிடிக்களும், அதற்கான பிளேயரும் தற்போதைக்கு ஜப்பானில் மட்டுமே கிடைக்கும்.



------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?




1 comment:

  1. தகவலுக்கு நன்றி.. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் இந்த வசதியை.

    ReplyDelete