இன்டர்நெட்டில் வெப் கேமரா மூலம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்குப் பல இணைய தளங்கள் வசதி அளிக்கின்றன. இந்த தளங்களில் ஓர் அக்கவுண்ட் ஒன்றைத் திறந்து, அந்த முகவரியை மற்றவர்களுக்குத் தர வேண்டும். இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள், குறிப்பிட்ட தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, நண்பர்களை அழைத்துப் பேசலாம். வெப் கேமரா இணைப்பு இருப்பதால், திரையில் தொடர்பு கொள்ளும் நண்பரின் உருவம் காட்டப்படும். அவரிடம் நேரில் பேசுவது போலப் பேசலாம். பெரும்பாலும் இத்தகைய வசதிகளுக்கு, எந்த தளமும் கட்டணம் பெறுவதில்லை. இன்டர்நெட் கட்டணம் மட்டுமே செலவாகும்.
இந்த வகையில் ஸ்கைப் தளம் தரும் வசதி பிரபலமான ஒன்றாகும். இந்த தளம் அண்மையில் இந்த வசதியைச் சற்று விரிவாகத் தந்துள்ளது. ஒரே நேரத்தில் ஐந்து பேர் தொடர்பு கொண்டு பேசும் வகையில், புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றைத் தன் இணையதளத்தில் சோதனைக்கெனத் தந்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாரும் இதனைப் பயன்படுத்தலாம். மேக் சிஸ்டம் கம்ப்யூட்டருக்கான பதிப்பு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும்.
குழுவாகத் தொடர்பு கொள்ள விரும்பும் அனைவரிடமும் இந்த சோதனைத் தொகுப்பு இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்து பின்னர் "Add" கிளிக் செய்து நண்பர்களை இணைக்க வேண்டும். அதன் பின்னர் "Video Call” பட்டன் கிளிக் செய்து, குழுவாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசலாம்.
இந்த சேவை தற்போது இலவசமாகவே ஸ்கைப் தருகிறது. முழுமையான பதிப்பு வெளி யானால், இது பிரிமியம் வசதி எனக் கருதப்படுவதால், கட்டணம் செலுத்த வேண்டிய திருக்கலாம். இந்த சோதனைத் தொகுப்பினை, ஸ்கைப் தளம் உள்ள http://www.skype.com என்ற முகவரிக்குச் சென்று இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
------------------- நன்றி -------------------
No comments:
Post a Comment