கிங்ஸ்டனின் 64 GB பென்டிரைவ் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, March 17, 2010

கிங்ஸ்டனின் 64 GB பென்டிரைவ்


பென் டிரைவ் தயாரிப்பில் பிரபலமான கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 150 என்ற பிளாஷ் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு திறன் 64 ஜிபி.

மற்ற டிரைவ்களைக் காட்டிலும் சற்று கூடுதல் நீளத்தில், 77.5 மிமீ, இது அமைக்கப்பட்டுள்ளது. அகலம் 22 மிமீ மற்றும் தடிமன் 12.05 மிமீ. இதனுடைய எடை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் வெளிப்புற ஷெல் சிகப்பாக பாலிஷ் செய்யப்பட்டது போல் உள்ளது. இது இயக்கப்படுகையில் நீல நிறத்தில் உள்ளாக லைட் எரிகிறது.

பைல்களை நொடிக்கு 28.3 எம்பி வேகத்தில் படிக்கிறது. எழுதுகையில் நொடிக்கு 7.8 எம்பி வேகத்தில் செயல்படுகிறது. இந்த வேகம் சராசரியாக நாம் பிற பிளாஷ் டிரைவ்களில் பார்க்கும் வேகம் தான்.

ஐந்தாண்டு வாரண்டியுடன் கிடைக்கும் இந்த டிரைவ் குறியீட்டு விலை ரூ. 6,700.
சின்ன தகவல் :- 2012ல் 25 கோடி பிராட்பேண்ட்

இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, ஏன் அதில் பாதி அளவில் கூட, பிராட்பேண்ட் இன்டர்நெட் பயன்பாடு வளரவில்லை. எனவே மத்திய அரசு, வரும் 2012ல் 25 கோடி பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 50 கோடி பேர் மொபைல் இணைப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 80 லட்சம் பேர் மட்டுமே பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெற்றுள்ளனர்.

அனைத்து கிராம பஞ்சாயத்துக்களையும் வயர்லெஸ் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வழிச் சாலையில் பி.எஸ்.என்.எல். மூலம் கொண்டு வர முயற்சி எடுக்க அரசு திட்டமிடுகிறது. பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சம் என்பதால், அரசு இதில் தீவிர கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே உள்ள இணைப்புகளினால், பொதுவான வளர்ச்சி 0.06% அளவிற்கு வளர்ந்துள்ளது என்றும், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இந்த வளர்ச்சி கூடுதலாகும் என்றும் எதிர்பார்க்கிறது. சீனாவில் இவ்வளர்ச்சி 0.04% ஆக உள்ளது.------------------- நன்றி -------------------


வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.

என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com

No comments:

Post a Comment