டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்.... - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, February 13, 2010

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்....

டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்

ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷார்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷார்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To)  என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷார்ட் கட் அமைக்கப்படும்.


கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்

அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெ ண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?

* கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.

* Tools  கிளிக் செய்து Options  தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print  என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Printing options" என்ற பகுதியில் உள்ள "Reverse print order" என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்

சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகளின் ஒரு தொகுப்பு முன்பு தரப்பட்டது. இதோ இரண்டாவது தொகுப்பினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.

Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.

Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.

Win + L  உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.

Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.

Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.

Win + P  பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.

Win + R  ரன் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

Win + U அக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.

Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.


--------------------------------------நன்றி---------------------------------------- 

2 comments:

  1. mihavum sirapana sevaiyai. theriyatha palavatrai ungalain sevaiyinal therindhu konden. thankyou so much.

    ReplyDelete
  2. theriyatha pala visayangalai thangalin sevaiyinal therindhu konden. thanks for your wonderful service. thank you so much

    ReplyDelete