பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, September 24, 2012

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்

இரண்டு சிம்களைப் பயன்படுத்தும் மொபைல் போன்களே இன்றைய நடைமுறைப் போன்கள் ஆகிவிட்டன. அது ஓர் அடிப்படை வசதியாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நோக்கியா உட்பட பல நிறுவனங்கள், இரண்டு சிம்களுடன் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

இதனை அடுத்து இப்போது ஸ்மார்ட் போன்கள் பரவலாக மக்களிடம் இடம் பெற்று வருகின்றன. ஒரு காலத்தில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் காணப்பட்ட ஸ்மார்ட் போன், தற்போது பெருகி வரும் இணையப் பயன்பாட்டால், ஓர் அடிப்படைத் தேவையாகவே கருதப்படுகிறது. அதற்கேற்றார் போல், ஸ்மார்ட் போன்களும் குறைந்த விலைக்குக் கிடைக்கத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, ஸ்பைஸ் மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களைக் குறைந்த விலையில் தரத் தொடங்கி உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. கார்பன் ஏ7 :

கார்பன் போன்கள் மக்களிடம் அவ்வளவாக இன்னும் பரவவில்லை என்றாலும், கார்பன் ஏ7 குறிப்பிட்டுச் சொல்லும்படியான இயக்கத்தைக் கொண்ட ஸ்மார்ட் போனாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் 2.3.6. சிஸ்டம், இரண்டு சிம் இயக்கம், 3ஜி வசதி, 3.5 அங்குல எல்.சி.டி. திரை, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை-பி, அ2ஈக இணைந்த புளுடூத், A2DP சப்போர்ட் இணைந்த ஜி.பி.எஸ். வசதி, டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா, ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 512 எம்.பி.மெமரி, மைக்ரோ எஸ்.டி. மூலம் மெமரி அதிகப்படுத்தக் கூடிய வசதி ஆகியவை இந்த போனின் சிறப்புகள். இதன் அதிக பட்ச விலை ரூ. 7,400.

2. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ 100:

மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன். ரூ.10,000 அதிக பட்ச விலை எனக் குறியிடப்பட்டுக் கிடைக்கும் இந்த மொபைல் போனில், ஆண்ட்ராய்ட் 4.0. சிஸ்டம், 5 அங்குல திரை, 11.9 மிமீ தடிமன், 168 கிராம் எடை, பின்புறமாக 5 எம்பி கேமரா மற்றும் முன்புறமாக ஒரு விஜிஏ கேமரா, 1 கிகா ஹெர்ட்ஸ் வேக சி.பி.யு., அ2ஈக இணைந்த புளுடூத், அஎககு சப்போர்ட் இணைந்த ஜி.பி.எஸ். வசதி, 2 ஜிபி மெமரி, 512 எம்பி ராம் மெமரி, நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தும் வசதி எனப் பல சிறப்பம்சங்கள் தரப்பட்டுள்ளன.

3. ஸ்பைஸ் எம்.ஐ. 350 என்:

ரூ.10,000 விலைக்குக் குறைவான நல்ல ஸ்மார்ட் போன் எனில், பலரும் இதனைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். இரண்டு சிம் இயக்கம், 3.5 அங்குல எல்.சி.டி. திரை, 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை-பி டி.எல்.என்.ஏ. ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்து பயன்படுத்தக் கிடைக்கின்றன. பின்புறமாக 3.2 மெகா பிக்ஸெல் கேமராவும், முன் பக்கமாக, வீடியோ அழைப்புகளுக்கு, 0.3 எம்.பி. திறன் கேமராவும் உள்ளன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 170 எம்பி மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 7,800.


4. ஸ்பைஸ் ஸ்டெல்லார் எம்.ஐ.425:

ரூ.9.500 என அதிகபட்ச விலையிட்டு, இந்த போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் செயல்படுகிறது. குவால்காம் எஸ்.ஓ.சி. சிப் இதில் செயல்படுகிறது. எந்தச் சிக்கலும் இல்லை. 4 அங்குல அகலத்தில் எல்.சி.டி. திரை மற்றும் 3ஜி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை-பி டி.எல்.என்.ஏ. ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்து பயன்படுத்தக் கிடைக்கின்றன. A2DP இணைந்த புளுடூத், அஎககு சப்போர்ட் இணைந்த ஜி.பி.எஸ். வசதி உள்ளது. ஆட்டோ போகஸ் சென்சார் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன் கிடைக்கிறது. முன்புறமாக 1.3 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 140 எம்பி மெமரி கிடைக்கிறது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 9,500  .

------------------- நன்றி -------------------

இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

1 comment:

  1. good article..but when comparing this smartphones with Pantech Burst p070, costly..i am using this mobile for last six months, excellent..bought from usa...it has 1.5 dual core processor, amoled 4" screen..1gm ram..16gb internal..and sd card slot..try this..i recommed..

    ReplyDelete