இணையத்தைப் பார்வையிட சிறந்த உலாவி எது? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, March 21, 2012

இணையத்தைப் பார்வையிட சிறந்த உலாவி எது?


வேகமாக முன்னேறிவரும் இணைய தகவல் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின் நாமும் அதற்கேற்றவாறு மாற்றங்களை செய்வதும் அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். அதிக பார்வையாளர்களை கவர்ந்த Firefox  உலாவியை பற்றி ஒரு பார்வை.

Microsoft தனது மார்க்கெட்டிங் உத்தியாக internet explorer இலவசமாக வழங்க தொடங்கியது. மேலும் internet explorer ஐ மேம்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களாலும் internet explorer இன் ஆகப் பழைய version ஆன internet explorer 6 ஐ பாவிக்க காரணமாக இருக்கலாம். இதற்கு மாற்றீடாக மிக வேகமான மற்றும் பாதுகாப்பான உலாவி Firefox  ஐ பயன்படுத்தலாம்.

ஏன் Firefox ?

அண்மைய ஆய்வுகளின் படி இணைய பாவனையாளர்களில் 45 வீதமானோர் Firefox  பாவணையாளர்கள் ஆவார்கள். IE 6 பாவிப்பவர்கள் 27% வீதமும் IE 7 பாவிப்பவர்கள் 24% வீதமும் ஆகும்.

Microsoft இன் புதிய பதிப்பான IE 8 வெறும் 1.4% வீதமானோரே உபயோகிக்கின்றனர். மிக முக்கியமாக Firefox  ஆனது Acid2 Browser Test எனும் இணைய தொழில்நுட்ப தகுதியில் தேறி உள்ளது. IE 6 மற்றும் IE 7 போன்றவை இதில் அடங்கவில்லை. இதனாலேயே HTML, CSS 2.0 specifications களுக்கு மிக ஏற்ற உலாவியாக Firefox  உள்ளது.

URL ஐ தட்டியதும் Browser History , and Bookmark போன்றவற்றில் தேடி முழு URL ஐயும் கீழே காட்டுதல். URL பக்கத்திலேயே வசதியாக தெரியும் Star Button ஐ இருமுறை அழுத்தினால் நேரடியாக Bookmark செய்யும் வசதி, Tab Browsing வசதி, Bookmark Toolbar வசதி , இணைய பக்கத்தினுள் தேடும் வசதி, மேலும் Sessions Restore, built-in spell checking, integrated search, pop-up blocker, clear private data, and automated behind-the-scenes updates. பாதுகாப்பு வசதிகளாக Mal ware, Phishing பாதுகாப்பு, Extended Validation Secure Socket Layer (EV SSL) போன்றவற்றுக்கு இசைவாக்கம் பெற்றிருத்தல், ஆகியவையே Firefox  க்கு வலுச் சேர்க்கின்றன.

கணனியின் வளங்களையும் குறைவாக பயன்படுத்தக்கூடியதும் இலவசமானதும் மாறி வரும் இணைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க கூடியதும், இணைய பாவனையின் முழுமையான அனுபவத்தையும் பெறக்கூடியதாக நிச்சயமாக Firefox  உலாவி இருக்கும.

Firefox  புதிய பதிப்பை தரவிறக்க இங்கே செல்லுங்கள். http://www.mozilla.org/en-US/firefox/fx/

இந்திய பார்வையாளர்களில் இணைய உலாவி பயன்பாடு பற்றிய வரைபடம் இந்த இணைப்பில் உள்ளது- http://gs.statcounter.com/#browser_version-IN-monthly-201103-201202


------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

1 comment:

  1. CSS 3 மற்றும் HTML 5 ஏற்ற வாரும் பயர் பாக்ஸ் உள்ளது ...

    அருமையான எளிமையான உலாவி ....

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete