ஆங்கில இலக்கணம் கற்கலாமா! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, June 14, 2011

ஆங்கில இலக்கணம் கற்கலாமா!

Grammar Book என்ற பெயரில் இணைய தளம் ஒன்று http://www.grammarbook.com/english_rules.asp என்ற முகவரியில் இயங்குகிறது.
முறையாக ஆங்கில இலக்கணம் கற்க பல வழிகள் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் Grammar Rules, Punctuation Rules, Capitalization Rules, Commonly Confused Words, மற்றும் Rules for Writing Numbers எனப் பல பிரிவுகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. ஓரமாகத் தரப்பட்டுள்ள மெனுவில் English Usage Videos, Free Online Quizzes, மற்றும் the Grammar Blog என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் உள்ள Grammar Blogல் பலவகையான இலக்கண விளக்கங் கள் தரப்பட்டுள்ளன.

வீடியோ பிரிவில், சிறு சிறு பாடங்கள் தரப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் எடுத்துக்காட்டுக்களைக் காட்டிலும் இவற்றில் தரப்பட்டுள்ள விளக்கங்கள் நாம் கற்றுக் கொள்வதனை எளிதாக்குகின்றன. மொத்தம் 68 வீடியோ கிளிப்கள் உள்ளன. ஆங்கில மொழி ஆக்கத்திற்கான விதிமுறைகளை இவை விளக்குவது எளிதாக உள்ளது.

ஆங்கில மொழியை நன்கு கற்றுப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கும், கற்றவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கும் இது ஓர் அருமையான தளம்.


---------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
 

1 comment: