கூகுளின் லோகோ மியூசியம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

கூகுளின் லோகோ மியூசியம்






கூகுள் தேடுதல் தளங்களை, ஒரு நாளில் ஒரு முறையேனும் பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். நாம் செல்ல விரும்பும் தளங்களின் பெயர்களை டைப் செய்து, அதில் தவறுகளைத் திருத்துவதனைக் காட்டிலும், அது சார்ந்த பொருள் குறித்து, தகவல் தேடி, கிடைக்கும் முடிவுகளில் நாம் செல்ல இருக்கும் தளத்திற்கான லிங்க்குகளில் கிளிக் செய்பவர்களே அதிகம். எடுத்துக்காட்டாக, என் நண்பர் ஒருவர் தான் பயணம் செய்திட, ட்ரெயின் டிக்கட் பதிவு செய்திட, கூகுள் தளம் சென்று, அதன் முகவரியில் நான்கு எழுத்துக்களை மட்டும் டைப் செய்து, அந்த தளத்திற்கான லிங்க் பெற்று, கிளிக் செய்து செல்வார். ஏன், இதனைப் புக்மார்க்காக அமைத்துக் கிளிக் செய்திடலாமே என்று கேட்டால், இதுதான் எளிது; செய்து பாருங்கள், சார் என்பார்.

சரி, இன்றைய விஷயத்திற்கு வருவோம். கூகுள் பொதுவாக, தன் தேடுதல் தளத்திற்கான பெயர் அமைத்திடும் இலச்சினையை, அன்றைய நாளுக்கேற்றபடி வித்தியாசமாக அமைத்திடும். தீபாவளி, சுதந்திர தினம் போன்ற குறிப்பிட்ட நாட்டின் விசேஷமான தினமாக இருந்தாலும் சரி, அன்னையர் தினம் போன்ற பன்னாடு தழுவிய தினமாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ் போன்ற உலகளாவிய விளையாட்டு விழாவாக இருந்தாலும், அதற்கேற்ப அந்த இலச்சினை அமையும். இவை வேடிக்கையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருக்கும். இதில் வருத்தம் தரும் செய்தி, அந்த பண்டிகை அல்லது கொண்டாட்டம் முடிந்தவுடன் இவையும் காணாமல் போகும். வழக்கமான இலச்சினை மட்டுமே காட்டப்படும். சரி, இந்த இலச்சினைகளை எல்லாம் மொத்தமாக நாம் பார்க்க முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா! அதற்கான விடை தான் கூகுள் லோகோ மியூசியம். உங்கள் பிரவுசரில் Google.com செல்லுங்கள். அங்கு தேடுதல் கட்டத்தில் “Google Logos” என டைப் செய்திடவும். கிடைக்கும் லிங்க்ஸ் பட்டியலில், முதலில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து செல்லவும். உடனே, 2000 ஆண்டு முதல், கூகுள் காட்டிய அனைத்து லோகோக்களும் வைத்திருக்கும் தளத்திற்குச் செல்வீர்கள். பார்த்து ரசியுங்கள்.

கூகுள் லோகோஅனைத்தையும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் : http://www.google.com/logos/



------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?



No comments:

Post a Comment