விண்டோஸ் எக்ஸ்புளோரர் கூடுதல் சிறப்பு அம்சங்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, September 7, 2010

விண்டோஸ் எக்ஸ்புளோரர் கூடுதல் சிறப்பு அம்சங்கள்


விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கத்தில் பல புதிய மாறுதல்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அதன் விண்டோஸ் எக்ஸ்புளோரர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லாமல் அப்படியே தான் இயங்கு கிறது. விஸ்டாவிலிருந்து பார்க்கையில் ஒரு சில குறிப்பிட்டுச் சொல்ல முடியாத மாற்றங்களை மட்டும் இங்கு காணலாம். இந்த வகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பல கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பெட்டர் எக்ஸ்புளோரர் (Better Explorer) என்னும் சாப்ட்வேர். இது தனியாகவே தன்னுடைய இன்டர்பேஸ் மூலம் பல வசதிகளைத் தருகிறது.

முதலாவதாக இப்போது இன்டர்நெட் பிரவுசர்களில் காணப்படும் டேப்களை இங்கு இணைத்துப் பார்க்கலாம். டேப்கள் இல்லாமல் வழக்கம் போல கிடைக்கும் தோற்றத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாட்டை விரும்பினால், அதனையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பைத் தயாரிப்பவர்கள் இன்னும் பல மாற்றங்களை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் கொண்டு வர முயற்சிப்பதாக, இவர்களின் தளத்தில் அறிவித்துள்ளனர்.

பெட்டர் எக்ஸ்புளோரர் புரோகிராமிற்கும், கூடுதல் தகவல்களுக்கும் http://bexplorer.codeplex.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?



No comments:

Post a Comment