தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, January 17, 2013

தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன?


பல நேரங்களில், நாம் இணைய தளங்களிலிருந்து கோப்புகளை, படங்களை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்க கோப்புகளை டவுண்லோட் செய்கிறோம். தரவிறக்கம் செய்திடும் முன் அதன் அளவு என்ன என்பது நமக்குக் காட்டப்படுவதில்லை. இறக்கிக் கொள்ள கட்டளை கொடுத்த பின்னரே, இந்த தகவல்கள் கிடைக்கின்றன. பைல் அளவு, நொடிக்கு எத்தனை பைட்ஸ், முழுவதுமாக இறங்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற குறிப்புகள் கிடைக்கும். ஆனால், இவை இறக்கிக் கொள்ள கட்டளை கொடுக்கும் முன்னரே கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதன் அடிப்படையில் அது தேவையா எனக் கூட நாம் முடிவெடுக்கலாம். இதனை புரோகிராம் ஒன்று நமக்குத் தருகிறது. இந்த புரோகிராமினை இலவசமாக தரவிறக்கம் செய்து,இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

அந்த புரோகிராம் பெயர் Get File Size. இந்த புரோகிராமினை http://www.unhsolutions.net/Get-File-Size/index.html என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். செய்தபின், நீங்கள் டவுண்லோட் செய்திட வேண்டிய பைலின் லிங்க் சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் மெனுவில் “Get File Size” என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தால் அந்த பைலின் அளவு மட்டுமின்றி, அந்த பைல் எப்போது அப்லோட் செய்யப்பட்டது, டவுண்லோட் ஆனால் அதன் அளவு எவ்வளவு இருக்கும், எவ்வளவு நேரம் ஆகும் என்ற தகவல்கள் கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் டவுண்லோட் மேனேஜர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் கவலைப் பட வேண்டாம். இந்த புரோகிராம் அதற்கு மாற்று கிடையாது.

இந்த புரோகிராமில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. இதன் தளத்தில் இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வரை உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் பின்னர் வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் இது இயங்காது.------------------- நன்றி -------------------

இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment