இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் வடிவமைப்பு, காட்சித் தோற்றம், டெக்ஸ்ட் ஆகியவை மிக முக்கியமானதாகத் தோன்றினால், அதன் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை சேவ் செய்து வைத்துப் பின்னர் நாம் உருவாக்கும் பிரசன்டேஷன் அல்லது வேர்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்த எண்ணுவோம். இதற்காக பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்து, பின் இமேஜ் எடிட்டர் (பெயிண்ட் போன்ற புராகிராம்) திறந்து அதனை பேஸ்ட் செய்து பைலாக்குவோம். இந்த பைல் நாம் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்கலாம். எனவே, நாம் விரும்பும் வகையில் அதன் அளவை அமைக்க முற்படுவோம். அதுவும் சில வேளைகளில் பிரச்னையைக் கொடுக்கலாம். இதற்கு மிக எளிய தீர்வு ஒன்றை http://screenshotmachine.com/ என்ற முகவரியில் உள்ள தளம் தருகிறது.
இந்த தளம் சென்று, நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டிய தளத்தின் யு.ஆர்.எல். முகவரியைத் தர வேண்டும். பின்னர் நீங்கள் விரும்பும் அளவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அளவாக முழுப்பக்கம், 1024 x 768, 800 x 600, 640 x 480, 320 x 240, 200 x 150, and 120 x 90 எனப் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர் அதில் உள்ள Start Capture பட்டனை அழுத்த வேண்டியதுதான்.
இந்த ஸ்கிரீன் ஷாட் மெஷின், நீங்கள் குறிப்பிடும் தளம் சென்று, நீங்கள் வரையறை செய்த அளவில், அதன் பக்கத்தினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அதனைத் தரவிறக்கம் செய்வதற்கான டவுண்லோட் லிங்க் தரும். அதில் கிளிக் செய்தால், பைல் தானாக உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கும். அல்லது நீங்கள் குறிப்பிடும் டைரக்டரியில், போல்டரில் படம் பதியப்படும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்களேன்.
------------------- நன்றி -------------------
இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment