ஆபீஸ் 2013 தொகுப்பின் சோதனை பதிப்பு வெளியாகி நமக்கு பழகிப் பார்க்க கிடைக்கிறது என்றாலும், இன்னும் ஆபீஸ் 2010 தொகுப்பே முழுமையாகப் பழக்கம் இல்லாமல் உள்ளதே என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்துபவர்கள் பலரிடம் உள்ளது. ஆபீஸ் 2010ன் பல சிறப்பியல்புகளின் பயன்களை நாம் தெரிந்து கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்றுதான் பலரிடம் பதில் வருகிறது. எம்.எஸ். ஆபீஸ் வரிசையில், ஆபீஸ் 2010 வழக்கமான மாற்றங்கள் என இல்லாமல், பல புதிய வகை மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அவற்றில் புதிய மாற்றங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, மக்களிடையே அதன் அபார வெற்றி உறுதியான பின்னரே, ஆபீஸ் 2010 வெளியானது. விண்டோஸ் விஸ்டா போல, ஆபீஸ் 2007 தொகுப்பு பயனாளர்களிடையே அவ்வளவாக பெயர் எடுக்கவில்லை என்பதை உணர்ந்த மைக்ரோசாப்ட், ஆபீஸ் 2010 தொகுப்பினை புதிய இன்டர்பேஸ் மற்றும் பயன்தரும் வசதிகளுடன் வடிவமைத்து வழங்கியது. இணைய அடிப்படையில், கூகுள் நிறுவனம், தன் கூகுள் டாக்ஸ் வசதி மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு சவாலைத் தந்ததனால், ஆபீஸ் 2010 தொகுப்பினை மிகக் கவனமாக முற்றிலும் புதிய எதிர்பாராத வசதிகளுடன் வடிவமைத்தது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.
தேடல் (Find) கட்டத்தில் நாம் தேடும் டாகுமெண்ட்கள் பட்டியலிப்படுகின்றன. இவற்றின் பிரிவியூ காட்சி தேடப்படும் வகையிலான டாகுமெண்ட்கள் அனைத்திற்கும் கிடைப்பதால், நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். ஒரே டாகுமெண்ட்டில் பலர் எடிட் செய்வதனை மிக எளிமையாக்கி உள்ளது ஆபீஸ் 2010. Windows Live account இருந்தால், டாகுமெண்ட்டினை எடிட் செய்கையிலேயே, வேர்டில் இருந்தபடியே, மற்றவருடன் கலந்தாலோசிக்கவும் முடியும்.
இத்தொகுப்பில், நம் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுக்கு shadow, bevel, glow, and reflection போன்ற விசுவல் எபக்ட் தர முடியும். இந்த எபக்ட் அமைத்த டெக்ஸ்ட்களிலும் ஸ்பெல்லிங் சோதனை நடத்த முடியும். இதுவரை படங்களுக்கு மட்டுமே நாம் இணைத்த சில எபக்டுகள், இப்போது டெக்ஸ்ட்களுக்கும் கிடைக்கின்றன. இதற்கு SmartArt Graphics என்ற வசதி தரப்பட்டுள்ளது. போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் இல்லாமலேயே, இமேஜ்களுக்கு கூடுதல் கிராபிக்ஸ் வசதியினை வேர்ட் தொகுப்பில் இருந்த படியே மேற்கொள்ள முடியும். நீங்கள் ஏதேனும் பைலை அமைத்துவிட்டு, சேவ் செய்திட மறந்து விட்டால், அதன் ட்ராப்ட் (Draft) பதிப்பை வேர்ட் 2010 வழங்குகிறது. வேர்ட் தொகுப்பில் இருந்தபடியே, ஸ்கிரீன் ஷாட் எனப்படும் திரைக் காட்சிகளை உருவாக்கவும், இணைக்கவும் முடியும். இந்த ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ள Backstage வியூ, வழக்கமான பைல் மெனுவின் இடத்தைப் பிடித்துள்ளது. ரிப்பன் இன்டர்பேஸ் மூலம், மிக விரைவாக கட்டளைகளைப் பெற முடிகிறது.
வேர்ட் 2010 தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம், ஒரே நேரத்தில் நாம் பல மொழிகளைக் கையாளும் வசதி கிடைத்திருப்பதுதான். சொற்கள், சொல் தொகுப்புகள் மற்றும் டெக்ஸ்ட் ஆகியவற்றை மொழி பெயர்த்துப் பெற முடிகிறது. ஒவ்வொரு மொழிக்குமான ஸ்கிரீன் டிப்ஸ்களை தனித்தனியே அமைத்துக் கொள்ள முடியும்.
------------------- நன்றி -------------------
இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment