"அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள்" ஒரு சிறப்பு பார்வை - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, December 13, 2011

"அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள்" ஒரு சிறப்பு பார்வை


இந்த ஆண்டின் இறுதிவரை டேப்ளட் பிசிக்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், வரும் 2012 ஆம் ஆண்டு அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள் தான் பிரபலமாகும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

அல்ட்ராபுக் என்பது என்ன? முன்பே ஒருமுறை இது குறித்து நாம் தகவல்களைத் தந்திருந்தோம். இன்டெல் நிறுவனம் இந்த பெயரைத் தந்து இதற்கு அதிக விளம்பரம் அளித்தது. இது ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர்; ஆனால் அதன் அம்சங்கள் கீழே தந்துள்ளபடி இருக்கும்.

இதன் தடிமன் 20 மிமீ (0.8 அங்குலம்); இதில் ஆப்டிகல் ட்ரைவ் இருக்காது; பைல்கள் அனைத்தும் சாலிட் ஸ்டேட் ட்ரைவில் தான் பதியப்பட்டு பாதுகாக்கப்படும்; இதில் ஐ5 மற்றும் ஐ7 கோர் ப்ராசசர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்; எடை 1.4 கிலோவிற்கும் குறைவாக இருக்கும்; இதன் பேட்டரி 5 முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து மின்சக்தியினை வழங்கத்தக்கதாக இருக்கும்.

லெனோவா, அசூஸ், ஏசர், எச்.பி. நிறுவனங்கள் இதனைத் தயாரித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன. பி.சி. லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் பிரிவில் இயங்கத் தங்களைத் தயார் படுத்தி வருகின்றன. லேப்டாப் பிரிவில் 2012ல் விற்பனை செய்யப்படும் கம்ப்யூட்டர் களில் 40% அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் களாகத்தான் இருக்கும் என இன்டெல் கணித்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்ற வகை கம்ப்யூட்டர்களுக்குப் போட்டியாக இருக்கும். எடுத்துச் செல்ல வசதியாக குறைந்த எடை, குறைவான அகல, நீள, தடிமன் பரிமாணங்கள் ஆகியவற்றினால் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்கள் மக்களிடம் இடம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் மேக் ஏர் போன்ற கம்ப்யூட்டர்கள் செய்யாததை இவை மேற்கொள்ள இருக்கின்றன. 3ஜி மற்றும் 4ஜி இணைப்பு கொண்டவையாக இவை உருவாக்கப்பட உள்ளன. இதற்கென தொலை தொடர்பு மற்றும் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர் களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பேசி வருகின்றன. விலையும் போகப் போகக் குறையும் என்பதால், 2012 ஆம் ஆண்டு அல்ட்ரா புக் கம்ப்யூட்டரின் ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

1 comment: