ஆங்கில மொழி அறிவுச் சோதனை - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, October 28, 2011

ஆங்கில மொழி அறிவுச் சோதனை



ஒரு மொழியில் நாம் கொண்டிருக்கின்ற புலமை, அம்மொழியின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது. மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக் கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில் நாம் கொண்டுள்ள திறமையினை சோதனை செய்து கொள்ள இணைய தளம் ஒன்று இயங்குகிறது. இதன் பெயர் Knoword. சொல் சோதனை மட்டுமின்றி, அதனைச் சரியான எழுத்துக்களில் அமைக்கிறோமா என்பதனையும் இது நம்மிடம் எதிர்பார்க் கிறது. இந்த விளையாட்டு தரப்படும் இணைய தள முகவரி http://www.knoword.org/home.php.

இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் நம் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களுடன், இதற்கென யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை அமைக்க வேண்டும். பின்னர், இதில் லாக் இன் செய்து விளையாடலாம். சொல் ஒன்றுக்கான விளக்கம் அளிக்கப்பட்டு, முதல் எழுத்து மட்டும் தரப்படும். நீண்ட கட்டத்தில் அந்த சொல்லை டைப் செய்திட வேண்டும். சரியாக டைப் செய்துவிட்டால், அடுத்த சொல் தரப்படும். சொல் தெரியாவிட்டால், அதனை ஸ்கிப் செய்திடலாம். அடுத்த சொல்லுக்கான எழுத்தும் விளக்கமும் தரப்படும்.

சொற்களை அறிந்து வைத்தல் மட்டுமின்றி, விரைவாகச் சிந்தித்து ஒரு சொல் எது என அறிவதும் முக்கியமாகிறது. சரியான எழுத்துக்களை டைப் செய்திடும் திறனும் வேண்டும். சொற்களைச் சரியாக டைப் செய்து கொண்டே சென்றால், அடுத்தடுத்து சொற்கள் கிடைக்கும். முதலில் ஒரு நிமிடம் தரப்படுகிறது. பின்னர் இது தொடர்கிறது. ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிகிறீர்கள் என்பதே இந்த கேம். பலர் சொற்களைக் கண்டறிவார்கள்; ஆனால் எழுத்துக்கள் சரியாக அமைக்க முடியாமல், தவறுகளை ஏற்படுத்துவார்கள். உங்களின் சொல் சரியாக அறியும் திறன், வேகம் ஆகியவை கணக்கிடப் படுகின்றன.

முடியாதபோது, நீங்கள் எத்தனை சொற்கள் சரியாக அமைத்தீர்கள் என்ற முடிவு காட்டப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இது பதிவு செய்யப் படும். அதிகச் சொற்களைக் கண்டறிந் தவர்கள் பட்டியலையும் பார்க்கலாம். உங்கள் ரேங்க் என்ன என்பதனையும் கண்டறியலாம். இதுவரை மிக அதிகமாக, 91 முறை விளையாடி, 7,76,075 புள்ளிகள் எடுத்து ஒருவர் முதல் இடத்தில் உள்ளார். இவர் சரியாகக் கண்டறிந்த சொற்கள் 38,260. அடுத்த இடத்தில் உள்ளவர் 4,89,760 புள்ளிகள் எடுத்துள்ளார். இவர் விளையாடியது 10 கேம்கள் மட்டுமே. இவர் சரியாகக் கண்டறிந்த சொற்கள் 24,003.

நீங்கள் எத்தனை சொற்களைக் கண்டறிந்தாலும், நீங்களும் இந்த பட்டியலில் இணைத்துக் காட்டப்படுவீர்கள். இதுவரை இந்த தளத்தில் விளையாடப்பட்ட கேம்ஸ் எண்ணிக்கை பத்து லட்சத்தினைத் தாண்டிவிட்டது.

ஒவ்வொரு நாளும் எத்தனை கேம்ஸ் விளையாடப்பட்டது, எத்தனை சொற்கள் சரியாகக் காணப்பட்டன, புதியதாக எத்தனை உறுப்பினர்கள் பதிவு செய்தனர் என்ற தகவல்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு காட்டப் படுகின்றன. அவசியம் அனைவரும் அடிக்கடி பார்க்க வேண்டிய ஓர் இணைய தளம்.

உங்களிடம் ஐபோன் இருந்து, அதில் இந்த சொல் விளையாட்டினை விளையாண்டு பார்க்க ஆசைப்பட்டால், அதற்கான அப்ளிகேஷனை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தள முகவரி http://itunes.apple.com/us/app/knoword/id436304807?mt=8/





------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment