யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, February 3, 2011

யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர்இன்றைய நிலையில் பாடல் ஒன்றை ரசித்துக் கேட்க வேண்டும் என்றால், யு-ட்யூப் தளத்தில் தேடிக் கேட்பதுதான் சரியான வழியாக உள்ளது. பலர், படம் பார்ப்பதைக் காட்டிலும், பாடல்களைக் கேட்டு ரசிக்க யு-ட்யூப் தளத்தினைப் பயன்படுத்துகின்றனர். புதிய பாடல்கள் மட்டுமின்றி, பழைய, மிகப் பழைய பாடல்களைக் கூட, ரசிகர்கள் அதில் போட்டு வைத்துள்ளனர். டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி (வயது 58) ஒருவர், தனக்கு ஜெயகாந்தன் எழுதிய ""தென்னங்கீற்று சோலையிலே'' என்ற பாடல் வேண்டும் எனக் கேட்டார். அதனைத் தேடி அலைகையில் அப்படி ஒரு பாடல் இருப்பதே பலருக்கு அப்போதுதான் தெரிய வந்தது. பல இசைப் பாடல் சேர்த்து வைத்திடும் பல இடங்களில் தேடி கிடைக்காமல், யு-ட்யூப் தளத்தில் தேடியபோது, அருமையான அந்த பாடல் கிடைத்தது. பி.பி. சீனிவாஸ் மற்றும் ஜானகி அவர்களின் (1960) காந்தர்வக் குரலில், பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ கிளிப் இசைத்தது.

சரி, விஷயத்திற்கு வருவோம். இப்படி பாடலைக் கேட்க, யு-ட்யூப் தளம் சென்று பைலை இயக்கிப் பாடலைக் கேட்கும் சிரமத்தைக் கூட தேவை இல்லாமல் செய்திடும் ஆட் ஆன் மியூசிக் பிளேயர் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்து கொண்டே இயக்கலாம். ஆடியோ பிளேயர் போல பல பிளே லிஸ்ட்டுகளை அமைத்து, இயக்கி , திருத்தி, இணைத்து, நீக்கி பாடல்களை ரசிக்கலாம். யு-ட்யூப் பைல்களில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், பிளே லிஸ்ட்டில் இணைக்கும் ஆப்ஷனைப் பெறலாம். இதில் இன்னும் பல மியூசிக் கண்ட்ரோல்களும் தரப்பட்டுள்ளன. ஒரு சில கண்ட்ரோல்களை பலர் விரும்ப மாட்டார்கள் என்றாலும், சில குறிப்பிடத்தக்கவை. பிளே லிஸ்ட்டைக் கலக்கிப் பார்க்கலாம்; ஒரு பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து கேட்கும் வகையில், திருப்பி திருப்பிப் பாடவைக்கலாம். வீடியோவினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். திரை ரெசல்யூசனை மாற்றலாம். திரை முழுவதும் அமைத்துக் கேட்கலாம். இந்த மியூசிக் பிளேயர் தனி விண்டோவில் பிரவுசருக்குச் சிக்கல் இன்றி காட்டப்படுகிறது.

இதனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், தரவிறக்கம் செய்திட, செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/10727/
 


new firefox addons,all firefox addons,addons for firefox,features of firefox addons
------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment