இலவச இமெயில் சேவையில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான் உலகின் நம்பர் ஒன் . சர்வரில் அதிக இடம் தருவதிலிருந்து புது புது வசதிகளைத் சீரான இடைவெளியில் இலவசமாக அளித்து வருவதால் பலரும் கூகுள் தளத்தினை விரும்பி பயன்படுத்துகின்றனர் .
இது இலவச சேவை என்பதால் தான் நினைத்த நேரத்தில் சேவையை நிறுத்த கூகிள் நிறுவனத்திற்கு உரிமை உள்ளது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் தகவல் இழப்பு நமக்கு தான் . கூகிள் நிறுவனத்தை நாம் கேள்வி கேட்க இயலாது .
கேட்க இயலாத படி கூகிள் Account உருவாக்கும் போதே Terms and Conditions என்ற ஒன்றில் இவ்விபரங்களை காட்டி அதில் " I Agree " என்ற ஒரு பட்டனையும் வைத்து நம்மை மடக்கி விடுகிறார்கள் .
எனவே நமது ஈமெயில்களை Back Up செய்து கொள்ள ஒரு டூல் ஒன்றினை Chez Republic நாட்டு நிறுவனம் இலவசமாக வழங்குகிறது .
இந்த டூலினை கீழ்க்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் உதவியால் நாம் நமது மின்ஞ்சலில் உள்ள ஒரு குறிப்பிட்ட வருடம் அல்லது குறிப்பிட்ட மாதத்தின் தகலல்களை மட்டும் Back Up எடுத்து கொள்ள முடியம்.
உங்களுக்கு தேவை என்றால் உங்கள் மின்ஞ்சலில் உள்ள அணைத்து தகலல்களையும் Back Up எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment