தெரிந்து கொள்ளலாம் வாங்க ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

தெரிந்து கொள்ளலாம் வாங்க !


ஆர்குட் சமுதாய இணைய தளத் தினை அதிகம் பயன்படுத்து பவர்கள் பிரேசில் நாட்டு மக்கள். அடுத்தபடியாக, இந்தியாவில் தான் ஆர்குட் தளவாசிகள் அதிகம்.

* மைக்ரோசாப்ட் நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு லட்சம் மவுஸ்களில், 5,000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டுக்குப் பின் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை அறிந்து அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
* சமுதாய தளங்களில், யு-ட்யூப் மற்றும் ட்விட்டர் தளங்களைக் காட்டிலும், இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது லிங்ட் இன் தளம் தான்.

* இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், குறைந்தது 86.6% பேர் வாரத்தில் ஆறு மணி நேரம் இணையத்தில் உலா வருகிறார்கள்.

* புளுடூத் தொழில் நுட்பத்திற்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் தெரி யுமா? அது டென்மார்க் நாட்டின் மன்னர் ஒருவரின் பெயர். ஹெரால்ட் புளுடூத் என்ற அந்த மன்னர், தன் நாட்டில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்த பல்வேறு ஆதிவாசி குழுக்களை ஒன்றிணைத்து, இணக்கமாக வாழ வழி செய்தார். அதற்கான நன்றிக் கடனாக, புளுடூத் தொழில் நுட்பம் கண்டறிந்த விஞ்ஞானிகள் அவரின் பெயரை, அத் தொழில் நுட்பத்திற்கு பெயரிட்டனர்.

* ட்ரைவ் அசிஸ்ட் என்ற சாப்ட்வேர் தொகுப்பினை, கனடா நாட்டைச் சேர்ந்த ஏஜிஸ் மொபிலிட்டி என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தினால், நாம் மொபைல் போனில் அழைக்கும் ஒருவர், வாகனம் எதனையேனும் ஓட்டிக் கொண்டிருந்தால், அழைப்பவருக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஆனால் அழைப்பதற்கான காரணம் மிக மிக முக்கியமானதாக இருந்தால், இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, அழைப்பை உண்டாக்கலாம். அல்லது மெசேஜ் கொடுப்பதற்கும் இந்த சாப்ட்வேர் வழி தருகிறது. அத்துடன் அழைப்பவர், அழைக்கப்படும் நபர் எங்கிருக்கிறார் எனவும் இந்த சாப்ட்வேர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

* பெட் போர்ட் என்ற நிறுவனம், நாம் செல்லமாக வளர்க்கும் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகள், வீட்டை விட்டு செல்லாத வகையில் கண்காணிக்கும் மைக்ரோ சிப் ஸ்கேனர் ஒன்றை வடிவமைத்து வழங்கி வருகிறது.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?2 comments:

  1. நல்ல தகவல்கள்

    ReplyDelete
  2. ஓட்டு போட்டுடன்.

    நன்றி...

    உங்கள் பதிவு மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது..

    ReplyDelete