தெரிந்து கொள்ளுங்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

தெரிந்து கொள்ளுங்கள்


அட்டாச்மெண்ட் (Attachment): இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்புகையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண்லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.

கிளாக் ஸ்பீட் (Clock Speed): மைக்ரோ ப்ராசசர் (சிப்) தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல் படுத்தும் வேகம் இவ்வாறு சொல்லப்படுகிறது. அதிவேக ஸ்பீட் கொண்ட ப்ராசசர், இந்த கட்டளை களை மிக வேகமாகச் செயல்படுத்தும். இதனால் டேட்டா அலசப்பட்டு, கட்டளைகளுக்கேற்றார்போல் நமக்கு விடை கிடைக்கும். இதனால் பயன்படுத்தப் படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் திறன் கூடுதலாகும். கிளாக் ஸ்பீட், வழக்கமாக மெஹா ஹெர்ட்ஸ் (Megaherts MHZ) ) என்ற அலகிலேயே குறிக்கப்படும். இது ஒரு நொடியில் பல லட்சக்கணக்கான துடிப்புடன் செல்லும் செயல் வேகம் ஆகும். கிகா ஹெர்ட்ஸ் என்பது பல நூறு கோடிகள் துடிப்பினைக் குறிக்கும்.

ரீபூட் (Reboot): கம்ப்யூட்டரை மீண்டும் ஒரு முறை புதிதாக இயக்குதல். பொதுவாக இவ்வாறு மீண்டும் இயக்குவதை ஸ்டார்ட் மெனுவில் கிடைக்கும் ரீஸ்டார்ட் மூலம் இயக்குவார்கள். பெர்சனல் கம்ப்யூட்டரின் டவரில் ரீஸ்டார்ட் பட்டன் தரப்பட்டிருந்தாலும் அதனை அழுத்தியும் ரீஸ்டார்ட் செய்திடலாம். கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் கீகளை அழுத்தியும் இந்த ரீஸ்டார்ட் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.

ஹைபர்னேட்(Hybernate): இந்த செயல்வகையில், கம்ப்யூட்டரின் அப்போதைய இயக்க நிலை, கம்ப்யூட்டர் மின்சக்தி நிறுத்தப்படும் முன் (Off) ஆவதற்கு முன், ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்யப்படும். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மீண்டும் மின் சக்தியை அளித்து இயக்கத்தினைத் தொடங்குகையில், (Oண) கம்ப்யூட்டரை ஆன் செய்கையில், ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்யப்பட்ட தகவல்கள் படிக்கப்பட்டு, இறுதியாக இருந்த செட்டிங்ஸ் மீண்டும் அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும். ஹைபர்னேட் செயல்வகை என்பது, ஏறத்தாழ ஸ்டேண்ட்பை / ஸ்லீப் செயல்வகை போன்றதே. ஆனால் அந்த வகைகளில் மின் சக்தி நிறுத்தப்படாது.

ரெஜிஸ்ட்ரி (Registry): விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு பைல். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பைல். இதில் நாமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் இதன் பேக் அப் காப்பி ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. புரோகிராம்களின் அடிப்படைச் செயல்பாட்டில் மாற்றங்களை மேற்கொள்ள இந்த பைலில் உள்ள வரிகளில் தான் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டேண்ட் அலோன் (Stand Alone) : ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது ஹார்ட்வேர் சாதனம், பிற எதனையும் சாராமல், தானாகச் செயலாற்றும் முறையினை இது குறிக்கிறது.

தர்ட் பார்ட்டி (Third Party): ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் இயக்கத்தின் செயல்பாடுகளுக்குத் துணை புரியும் வகையில், எழுதி அமைக்கும் சாப்ட்வேரைத் தயாரித்துத் தரும் நிறுவனத்தினை இவ்வாறு அழைப்பார்கள். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் இயக்கத்தில், படங்களைப் பார்க்க, எடிட் செய்திட, வீடியோ இயக்க, எடிட் செய்திடத் தரப்படும் சாப்ட்வேர்கள் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர்களாகும்.
ஸ்பேம்: (SPAM): இது நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் தேவையற்ற ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப் பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப் படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப் பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?1 comment: