எல்.ஜி.யின் கடிகார மொபைல் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, August 17, 2010

எல்.ஜி.யின் கடிகார மொபைல்





ஜி.டி. 910 என்ற எண்ணுடன், எல்.ஜி. நிறுவனம் கடிகார மாடல் மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எளிமையான வழி நடத்தும் மெனுக்கள், வசதியான வடிவமைப்பு, துல்லியமான ஒலி கொண்ட ஆடியோ, வெகு நேரம் திறன் தரும் பேட்டரி ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

மொபைல் போன் தொழில்நுட்பம் பல திசைகளில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மொபைல் போன் ஒன்றின் அளவைச் சிறிதாகத் தரும் முயற்சியிலும் பல நிறுவனங்கள் இறங்கி உள்ளன. அந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் கடிகாரம் போல மொபைல் போன் ஜி.டி. 910 ஐ வடிவமைத்துத் தந்துள்ளது. இந்த மாடல் போன் 84 கிராம் எடையில் உள்ளது. 1.4 அங்குல ரெசிஸ்டிவ் தொடு திரை சிறப்பாக காட்சி தருகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள தோலிலான, ஸ்ட்ராப் மணிக்கட்டில் இதனைக் கட்டிக் கொள்ள வசதியைத் தருகிறது.ஒரு சிறிய டப்பா நிறைய துணை சாதனங்கள் தரப்படுகின்றன. சார்ஜர், யு.எஸ்.பி.கேபிள், சிம் கார்டு நீக்குவதற்கான சாதனம், புளுடூத் ஹெட்செட், அதற்கான சார்ஜர் என இவை உள்ளன. டிஸ்பிளே திரைக்கு மேலாக ஒரு விஜிஏ கேமரா உள்ளது. இதன் மெமரி 2ஜிபி. எனவே உங்களுக்குப் பிடித்த பாடல்களை இதில் பதிந்து எடுத்துச் சென்று ரசிக்கலாம்.

தொட்டுப் பயன்படுத்தும் மெனு மிக எளிமையான முறையில் அமைக்கப் பட்டுள்ளது.சிறிய திரையாக இருந்தாலும், மெசேஜ் டைப் செய்வது விரைவாகவும், எளிதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இமேஜ் வியூவர், மியூசிக் பிளேயர் தரப்பட்டுள்ளன. இது ஒரு 3ஜி மொபைல். விநாடிக்கு 7.2 எம்.பி. வேகத்தில் டேட்டா கிடைக்கின்றன. வீடியோ கேமரா மூலமாக வீடியோ அழைப்பினை உருவாக்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்து டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். சிறிய கடிகார அளவில் இருந்தாலும், மொபைல் போன் ஒன்றுக்கான அனைத்து நவீன வசதிகளும் உள்ளன் என்பது இதன் சிறப்பு. அதே போல இதன் பேட்டரியும் இரண்டு நாட்களுக்கான திறனைத் தருகிறது. ஆனால் இது அதிக வசதி உடையவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான விலையில் கிடைக்கிறது. இப்போது இதன் குறியிடப்பட்ட விலை ரூ.39,990.


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?



No comments:

Post a Comment