வந்துவிட்டது குரோம் 5 பிரவுசர் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, April 12, 2010

வந்துவிட்டது குரோம் 5 பிரவுசர்


கூகுள் நிறுவனம் தன் அடுத்த பிரவுசர் பதிப்பான குரோம் 5 பதிப்பின் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென கிடைக்கிறது. குரோம் பிரவுசர் பதிப்புகளுக்கு கூகுள் எண்களைத் தராது. புதிய பதிப்புகளை மைல்ஸ்டோன் என அழைக்கிறது. பிரவுசர் மேம்பாட்டுத் தொகுப்புகளை முடியாத பயணமாக, கூகுள் கருதுகிறது.

ஏற்கனவே வெளியான குரோம் பிரவுசரின் வேகம் குறித்து கூகுள் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக பிரவுசர் பிரிண்ட் பிரிவியூ காட்டும் செயல்பாடு வேகமாக இல்லை என்று கூகுள் கருதுகிறது. இதைப் போல பல விஷயங்களை குரோம் பதிப்பு 5ல் மேம்படுத்துவதுடன், சில புதிய வசதிகளையும் கூகுள் தர இருக்கிறது. அவற்றைக் காணலாம்.

1. ஜியோ லொகேஷன் (Geo Location): தற்போது பிரபலமாகி வரும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்தின் பயன்பாட்டில் மிகச் சிறந்த வசதி, இன்டர்நெட்டில் உலா வரும் ஒருவரின் இடத்தை அந்த இணைய தளத்திற்கு அறிவிக்கும் வசதியாகும். இது அந்த பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதனால், ஒரு பயனாளரின் இடம் வரைபடத்தில் காட்டப்படும். பயனாளர் ஏதேனும் சேவை ஒன்றினை, அந்த இணைய தளத்திலிருந்து பெற விரும்பும் நிலையில், இணைய தளம் அவரின் இருப்பிடம் அறிந்து, அவர் அருகே அந்த சேவை எங்கு கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டலாம். மேலும் அந்த தளம் இயங்கும் சர்வர்களில் எது சிறப்பாக இயங்குகிறது என்பதும் அறியவரும். குறிப்பாக மொபைல் போன் வழி இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்கையில், இது இன்னும் எளிதாகிவிடும். ஏனென்றால் பல மொபைல் போன்களில் இப்போது ஜி.பி.எஸ். வசதி இணைந்தே கிடைக்கிறது.

2. விண்டோஸ் 7 செயல்முறைகள்: விண்டோஸ் 7 சிஸ்டம் பலரின் பாராட்டைப் பெற்று, அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அவற்றில் காணப்படும் வசதிகளை இந்த பிரவுசரில் கூகுள் இணைக்கிறது. குறிப்பாக ஏரோ பீக் (Aero Peek) வசதி இந்த பிரவுசரில் காட்டப்படும். டாஸ்க் பாரில் குரோம் ஐகான் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள டேப்களில் உள்ள இணைய தளங்களின் தம்ப் நெயில் படங்கள் காட்டப்படும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த வசதியினை ஏற்கனவே மைக்ரோசாப்ட் தந்து வருகிறது.

அதே போல ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்னும் விண்டோஸ் 7 வசதியும் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் என்ன என்ன செயலை மேற்கொள்ளலாம் என்பது, ஒரு மெனு மூலம் காட்டப்படும்.

3. எக்ஸ்டென்ஷன்ஸ் (Extension): கூகுள் தன் குரோம் பிரவுசரின் பதிப்பு 4 ஐ வடிவமைக்கும்போது அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. இதில் எக்ஸ்டென்ஷன் கள் பயன்படுத்துவது குறித்து தீவிரமாகச் செயல்படவில்லை. ஆனால் இந்த பதிப்பு 5ல் கூகுள் எக்ஸ்டென்ஷன்களை முழுமையாக, மூன்று (மேக் மற்றும் லினக்ஸ் உட்பட) வகை பதிப்புகளிலும் சப்போர்ட் செய்கிறது. மேலும் குரோம் பதிப்பு 4.1ல் விண்டோஸ் பதிப்பில் தரப்பட்ட ஆட்டோ மொழிபெயர்ப்பு பாப் அப் வசதி, மேக் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளுக்குத் தரப்படவில்லை. அதாவது கூகுள் வேறு ஒரு மொழியில் ஏதேனும் ஒரு தளம் கிடைக்கும்போது உடனே இந்த பாப் அப் விண்டோ கிடைக்கும். இந்த வசதி தற்போது பதிப்பு 5ல் மேக் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளுக்கும் கிடைக்கிறது.

4. இணைத்தல் (Syncing): இப்போதெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டரிலும் மொபைல் போன்களிலும், பிரவுசர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஒன்றுக்கொன்று மாறுகையில், முன் பயன்படுத்திய கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள இணைய தள விஷயங்களை இன்னொன்றில் அப்டேட் அல்லது இணைக்க வேண்டியதுள்ளது. இந்த வசதியை குரோம் பதிப்பு 5ல் தருகிறது கூகுள். தீம்கள், தானாக படிவம் நிரப்பும் வசதிகள், பாஸ்வேர்ட்கள், எக்ஸ்டன்ஷன்கள் ஆகியவற்றை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொண்டு பயன்படுத்த இணைக்கும் வசதியும் தரப்படுகிறது. கூடுதலாக இந்த பதிப்பில் ஆட்டோ பில் (Autofill) தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் பெயர்கள், முகவரிகள், போன் எண்கள் மற்றும் பிற தனிநபர் தகவல்கள் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு, படிவங்களில் நிரப்பப்படுகின்றன.

5. பிளாஷ் இணைப்பு: இதுவரை வேறு எந்த பிரவுசரிலும் இல்லாத ஒரு வசதியை, கூகுள் இந்த குரோம் பதிப்பு 5ல் தருகிறது. அடோப் நிறுவனத்தின் பிளாஷ் பிளேயரை இதில் ஒருங்கிணைத்துத் தருகிறது. கூகுள், அடோபின் பிளாஷ் தொழில் நுட்பத்திற்கு எதிரான எச்.டி.எம்.எல்.5, சி.எஸ்.எஸ். போன்ற தொழில் நுட்பத்தினை பலமாக ஆதரித்தாலும், இணையத்தில் பிளாஷ் பரவலாகத் தேவைப்படுவதால், அதனைத் தன் பிரவுசரில் இணைத்து வழங்குகிறது. இதில் என்ன ஆச்சரியம் எனில், பிளாஷ் பிளேயர் சோதனை பதிப்பான பதிப்பு 10.1 இதில் இணைக்கப்பட்டுள்ளது. அது அடோப் நிறுவனத்தால் அப்டேட் செய்யப்படுகையில், குரோம் பிரவுசரில் உள்ள பிளேயரும் அப்டேட் செய்யப்படும் என அறிவித்துள்ளது. பிளாஷ் மட்டுமின்றி அடோப் நிறுவனத்தின் பி.டி.எப். டாகுமெண்ட்களுக்கான சப்போர்ட்டும் பிரவுசரில் தரப்படுகிறது.
கூகுள் இத்தனை வசதிகளைத் தந்தாலும், இவற்றை விரும்பாதவர்கள், இந்த வசதிகளை ஒதுக்கிடவும் தேவையான டூல்களை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக பிளாஷ் விரும்பாதவர்கள், அதனை இந்த பிரவுசரில் முடக்கி வைத்துத் தாங்கள் விரும்பும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சோதனை பிரவுசர் தொகுப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் தளத்தில் இலவசமாகப் பெறலாம்.

http://www.google.com/chrome/eula.html
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தங்களிடம் Windows Vista அல்லது Windows 7-க்கான Key or Patch File or Activation Software இருந்தால் எனக்கு கொடுத்து உதவுங்கள். என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி :------------------- நன்றி -------------------


No comments:

Post a Comment