மொபைல் போன் வாங்கிவிட்டீர்களா! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, November 26, 2011

மொபைல் போன் வாங்கிவிட்டீர்களா!பல நாள் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு வசதி களைப் பட்டியலிட்டு மொபைல் போன் ஒன்று வாங்கிவிட்டீர்களா! நீங்கள் உடனே செய்திட வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

1. போனுடன் வந்துள்ள மொபைல் போன் மேனுவல் எனப்படும் போன் வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய சிறு நூலைப் படிக்கவும். நீங்கள் எதிர்பார்க்காத அடிக்கடி பயன்படுத்தாத சில வசதிகள் அதில் இருக்கும். அதில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்துங்கள்.

2. கடையில் கொடுத்த பில் மற்றும் வாரண்டி கார்டினைப் பத்திரப்படுத்தவும். அதிலேயே மொபைல் போனின் ஐ.எம்.இ. எண்ணை எழுதி வைக்கவும்.

3. உங்கள் மொபைல் போன் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் வெப்சைட்டிற்குச் சென்று உங்கள் போன் மாடலுக்கு அந்நிறுவனம் தந்துள்ள குறிப்புகளை டவுண்லோட் செய்து படித்து உணரவும். அல்லது ஒரு பிரிண்ட் காப்பி எடுத்து வைத்து அவ்வப்போது படிக்கவும்.

4. உங்கள் மொபைல் சர்வீஸ் குறித்த தகவல்களைப் பெற ஒரு கட்டணமற்ற தொலைபேசி எண் தரப்பட்டிருக்கும். அது 1800 எனத் தொடங்கலாம். அல்லது வேறு எண்ணிலும் தொடங்கலாம். அதனையும் கண்டறிந்து குறித்து வைக்கவும். மொபைல் சேவை பயன்பாட்டில் குறை ஏற்பட்டால் அந்த எண்ணில் தொடர்பு கொள்ளத் தயங்காதீர்கள். தொடர்பு கொள்ளும் முன் நீங்கள் வாங்கிய போனின் மாடல் எண், நிறுவனத்தின் பெயர், பிரச்னை குறித்த தகவல்கள் ஆகியவற்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

5. மொபைல் போன் திரையில் ஸ்கிராட்ச் ஏற்படாமல் இருக்க ஸ்கிராட்ச் கார்டு மொபைல் போன் கடையில் கிடைக்கும். விலை ரூ.10 முதல் ரூ.30க்குள் இருக்கலாம். அதனை வாங்கி கடை விற்பனையாளரையே ஒட்டித் தரச் சொல்லவும். இது மொபைலின் திரைக்குப் பாதுகாப்பு.

6. இன்னும் பத்திரமாக வைத்துக் கொள்ள மற்றும் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தேவையான சாதனங்கள் இருந்தால், விலை விசாரித்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete