டேப்ளட் பி.சி. வகைகள் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, July 2, 2012

டேப்ளட் பி.சி. வகைகள் !

Types of Tablet PC's

தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்நாளில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் (Mobile Computing) என்பது நம் வாழ்வின் அன்றாடத் தேவையாய் ஆகிவிட்டது. லேப்டாப் கம்ப்யூட்டர், பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (PDA) மற்றும் பிற டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் இன்றைய வர்த்தகத்தை நடத்துபவர்களுக்கும், அலுவலர்களுக்கும் அலுவலகத்தில் மட்டுமின்றி, அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தும் சாதனங்களாகி விட்டன. இதனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்த்திராத சாதனங்கள் தற்போது கிடைத்து வருகின்றன. அவற்றில் ஒன்று டேப்ளட் பி.சி.

டேப்ளட் பிசி என்பது சிறிய மாற்றத்துடன் வந்துள்ள ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர். லேப்டாப் கம்ப்யூட்டருடன் நாம் தொடர்பு கொள்ள கீ போர்ட் அல்லது டச் பேட் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் டேப்ளட் பிசியில் புதிய வகை டச் ஸ்கிரீன் அல்லது சில வேளைகளில் ஸ்டைலஸ் பயன்படுத்தி நம் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் மிக எளிதாக நாம் ஒரு டேப்ளட் பிசியை எடுத்துச் செல்ல முடியும்.

ஏனென்றால், இங்கு கீ போர்ட், மவுஸ் அல்லது மடக்கி வைக்கும் மானிட்டர் ஆகியன இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு டேப்ளட் பிசியில், மானிட்டரின் உள்ளாகக் கம்ப்யூட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

டேப்ளட் பிசியில் நான்கு வகையான மாடல்கள் உள்ளன. அவை “booklet”, “slate”, “convertible” மற்றும் “hybrid” ஆகும். தொழில் நுட்பமும் தேவைகளும் வளரும் இந்நாளில் இன்னும் சில மாடல்கள் வெளிவரலாம்.

1.புக்லெட் டேப்ளட்: புக்லெட் டேப்ளட் பிசி ஒரு புத்தகம் போல இருபுறமும் விரியும். இரு புறங்களிலும் திரை இருக்கும். இரண்டு திரைகளிலும் டச் ஸ்கிரீன் செயல்பாடு கிடைக்கும். கூடுதலாக ஸ்டைலஸ் பென் தரப்பட்டிருக்கும். இந்த திரையில் எழுதப்படுபவற்றை அறிந்து கொண்டு செயல்படும் சாப்ட்வேர் (pen writing recognition software) இதில் கட்டாயம் இடம் பெறும். ஒரு பேப்பரில் எழுதுவது போல ஸ்கிரீனில் எழுதினால், கம்ப்யூட்டர் அதனை கட்டளையாக ஏற்றுச் செயல்படும். இதனை மடக்கி வைத்துப் பின் விரித்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு பக்கம் உள்ள திரையிலும், ஒரு அப்ளிகேஷனை இயக்கலாம். நூல்களைப் படிக்கலாம்; இன்டர்நெட் உலா வரலாம்; மியூசிக் மற்றும் பிற ஊடகங்களை இயக்கலாம்.

2. ஸ்லேட் டேப்ளட் : ஒரு சிறிய தட்டையான டிவியைத் தூக்கிச் செல்வது போல ஸ்லேட் டேப்ளட் பிசி இருக்கும். இதிலும் கீ போர்ட் இருக்காது. ஸ்டைலஸ் அல்லது டச் ஸ்கிரீன் பயன்படுத்தியே டெக்ஸ்ட் மற்றும் கட்டளை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஆனால் வயர்லெஸ் கீ போர்ட் அல்லது யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்டினை இசைவாக இதனுடன் பயன்படுத்தலாம். கீ போர்ட் இல்லாததினால், மிகவும் சிறியதாக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் இந்த வகையினைச் சார்ந்தது.

3. கன்வர்டபிள் டேப்ளட்: டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன், கீ போர்டு செயல்பாட்டினையும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கன்வர்டபிள் டேப்ளட் பிசிக்கள் உதவியாய் இருக்கும். இதனை மூடி வைத்திருக்கையில், ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் போலவே தோற்றம் அளிக்கும். ஆனால், திறந்தவுடன், 180 டிகிரி கோணத்தில் திரும்பும் வகையில் இதன் திரை காணப்படும். வழக்கமான நோட்புக் கம்ப்யூட்டர் போல இதனைச் செயல்படுத்தலாம்.

4. ஹைப்ரிட் டேப்ளட்: ஸ்லேட் மற்றும் கன்வர்டபிள் டேப்ளட் பிசிக்கள் இணைத்து உருவானது போல இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய மானிட்டரை மட்டும் பயன்படுத்தி இதனை ஒரு ஸ்லேட் கம்ப்யூட்டர் போல பயன்படுத்தலாம். அல்லது கீ போர்டினை இணைத்தும் பயன்படுத்தலாம். இவற்றைக் கழற்றியும் வைத்துக் கொள்ளலாம். ஸ்டைலஸ் பென் மற்றும் டச் ஸ்கிரீன் வசதிகளும் இதில் உண்டு.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment