ஸ்லைடுகளில் எம்பி3 இணைக்க! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, June 25, 2012

ஸ்லைடுகளில் எம்பி3 இணைக்க!


 மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல்களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம்பி3 பாடல்களை இணைப்பதுதான். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடுகளில் பதிந்து கொள்ளலாம்.

எம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற்றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு புரோகிராம் மூலம் பார்மட்டினை மாற்றிப் பின் அதனை பிரசன்டேஷன் பைலில் இணைப்பார்கள். MP3 AddIn புரோகிராம் இந்த சிக்கலைத் தீர்க்கிறது. இது பைலில் ஹெடர் ஒன்றை இணைத்து, இதனை வேவ் பைல் போலக் காட்டி, பிரசன்டேஷன் புரோகிராமினை ஏமாற்றுகிறது. வழக்கமாக வேவ் பைலாக மாற்றுகையில், பைலின் அளவு பெரிதாகும். இந்த புரோகிராம் பைலில் ஹெடர் ஒன்றை மட்டும் இணைப்பதால், இந்த பிரச்னை எழுவதில்லை. மொத்த பைலின் அளவும் 2 பைட் மட்டுமே அதிகரிக்கிறது. மேலும் இந்த பிரசன்டேஷன் பைலை மற்றவர்களுக்கு அனுப்புகையில், எம்பி3 பைலையும் தனியே இணைத்து அனுப்ப வேண்டியதில்லை. பிரசன்டேஷன் பைலுடன் இணைந்தே இசைக் கோப்பும் செல்கிறது.


இந்த MP3 AddIn புரோகிராமினை டவுண் லோட் செய்திட http://www.topbytelabs.com/freestuff/index.php?id=68 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment